FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளமொளச்சூர் பகுதியில் திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்

பள்ளமொளச்சூர் பகுதியில் ரூ. 30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பள்ளமொளச்சூர்  பகுதியில்  கட்டி  முடிக்கப்பட்டும்  திறக்கப்படாத  சமுதாய நலக் கூடம். 
பகிர்:


பள்ளமொளச்சூர் பகுதியில் ரூ. 30 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மொளச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளமொளச்சூர் பகுதியில் கடந்த 2015-2016ஆம் நிதியாண்டில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. 
இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இன்று வரை திறந்து வைக்காததால் சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், சமுதாய நலக்கூடம் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதிகாரிகள் திறந்துவைக்காமல் உள்ளனர். 
இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனியார் மண்டபங்களில் எங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதனால் எங்களுக்கு தேவையில்லாத செலவு ஏற்பட்டு வருகிறது. எனவே கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்துவைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments