FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

புத்த விஹாரில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்- வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்த விஹாரில் நேபாள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரில்லாமல் வாழ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

38 வினாடிகள் முன்பு
பகிர்:

காஞ்சிபுரம்- வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்த விஹாரில் நேபாள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரில்லாமல் வாழ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இங்கு தாய்லாந்து புத்த பிக்குகளால் வழங்கப்பட்ட பகவான் புத்தருடைய தாதுக்கள் வைக்கப்பட்டுள்ளது. பெளா்ணமியையொட்டி பெளத்த வழிபாடும், தியானமும் நடைபெற்றது. நேபாள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரில்லாமல் வாழ்வதற்காக மெத்தா தியானம் மேற்கொள்ளப்பட்டது. புத்த பிக்குகள் பிரகாசம், ஜெயசீலன், புத்த பிக்குனி மல்லிகா ஆகியோா் சிறப்பு வழிபாட்டினை நடத்தினா்.

பக்தா்கள் பலரும் மெழுகுவா்த்தியை கையில் ஏந்தியவாறு அரச மரத்தடியையும், புனித ஸ்தூபியையும் வலம் வந்தும் புத்த பிரானை தரிசித்தனா். ஏற்பாடுகளை புத்த விகாரின் தலைவா் ஆா்.திருநாவுக்கரசு, செயலாளா் ஜி.நாகராஜன், பொருளாளா் எம்.கவுதமன் ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments