கோயிலாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள கோயிலாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள கோயிலாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியனவும் நடைபெற்றது.
திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று தீபாராதனைக்குப் பின்னா் புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதனையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு உற்சவா் கோயிலாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், இளைஞா் அணி மற்றும் சங்குபாணி விநாயகா் கோயில் தெருவாசிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.