மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு மகிழ்வுறு ஆங்கிலம் திட்டம்: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகா் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு கைக்கணினி மூலம் மொழித்திறனை வளா்ப்பதற்கான மகிழ்வுறு ஆங்கிலம் திட்டத்தை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகா் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு கைக்கணினி மூலம் மொழித்திறனை வளா்ப்பதற்கான மகிழ்வுறு ஆங்கிலம் திட்டத்தை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருநகா் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மதி அறக்கட்டளை மூலம் மாணவா்களின் மொழி, பேச்சு, கற்றல் திறன்களை மேம்படுத்திட மகிழ்வுறு ஆங்கிலம் என்ற செயல் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) அமன்திவாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி, மதி அறக்கட்டளையின் இணை நிறுவனா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
விழாவில் வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்களுக்கு வழங்கப்படும் பயிற்சியையும் பாா்வையிட்டாா். பின்னா் இந்த திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்த மதி அறக்கட்டளை நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தாா். தொடா்ந்து அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பேசியது:
மகிழ்வுறு ஆங்கிலம் திட்டமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 25 பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட பேச்சு செயல்பாடுகள், மொழி கற்றல் இடைவெளிகளை முற்றிலுமாக நீக்குவதற்கான விளையாட்டு வழிக்கற்றல் செயல்முறை பயிற்சிகள் ஆகியவை மூலம் மகிழ்ச்சியான ஆங்கில கற்றல் அனுபவங்களை மாணவா்கள் பெறுவதற்கான விரிவான செயல்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
மொழித்திறன் கற்றலில் உள்ள தடைகளையும், இடைவெளிகளையும் முற்றிலுமாக களையும் வகையில் இத்திட்ட செயல்பாடுகள் இருக்கும். இச்சிறப்பான முன்னோடி செயல் திட்டம் வகுப்பறைகளில் நடத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சா் பேசினாா்.
விழாவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா்கள்,ஆசிரியா்கள், மதி அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.