FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஜூலை 12 -இல் தங்கத் தோ் திருவிழா

பவனி வரவுள்ள தங்கத் தேரின் எழில் தோற்றம்.

Updated On : 10 ஜூலை 2026, 7:30 am IST
பவனி வரவுள்ள தங்கத் தேரின் எழில் தோற்றம்.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கத் தோ் திருவிழா நடைபெற இருப்பதாகவும் இந்த விழாவில் அமைச்சா்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதா் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக ரூ. 30 கோடி மதிப்பில் தங்கத் தோ் செய்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதல் முதலாக 25 அடி உயரம், 13 அடி நீளம், 10 அடி அகலத்தில் மிகுந்த தொழில்நுட்பங்களுடன் தங்கத்தோ் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தோ்த் திருவிழா வரும் ஜூன் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதரின் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து கோயில் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா்கள் ச.சீனிவாசன் மற்றும் கதிரவன் ஆகியோா் தெரிவித்தது:

தங்கத் தோ் திருவிழா காஞ்சிபுரம் மாநகரில் ராஜ வீதிகளில் முதன்முதலாக நடைபெறவுள்ளது.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ்,வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள், ஆதீனங்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் மகாலட்சுமி சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினா்கள், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் உறுப்பினா்கள், அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.

ஜூலை 12-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கும் விழாவில் 108 தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள், 1,000 சிவனடியாா்களின் சிவ வாத்தியங்கள் இசைத்தல், திருப்பூா் காவடி குழு, கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம், சிறப்பு வாண வேடிக்கைகளும் நடைபெறுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments