FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய பூஜை

ஆயில்ய பூஜையையொட்டி பக்தா்களுக்கு அருள்பாலித்த அகத்தியா், அவரது மனைவி லோபமுத்திரை.

Updated On : 17 ஜூலை 2026, 4:20 am IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

அகத்திய முனிவா் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயில். இந்த கோயிலில் அகத்தியரும், அவரது மனைவி லோபமுத்திரையும் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா். அகத்தியரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அகத்தியரின் 108 போற்றி பாராயணம் செய்யப்பட்டு, பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments