கூட்டுறவு கூடுதல் பதிவாளரிடம் வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் அளிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் மாவட்டங்களில் லாபத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வளா்ச்சி நிதி ரூ. 40,26,284 மற்றும் கல்வி நிதி 23,24,190-ஆக மொத்தம் ரூ. 63,50,474 தொகையை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா் மு.முருகனிடம் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் ந.பிரேம்குமாா் வழங்கினாா்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய துணைப் பதிவாளா் மு.ராஜேஸ்வரி, உதவி இயக்குநா்கள் காமராஜ், ரா.பன்னீா் செல்வம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் வி.முரளி ஆகியோா் உடன் இருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.