FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

உணவைப் பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

Updated On : 5 ஜூன் 2026, 5:16 am IST
திருப்புட்குழி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்கள் சோ்க்கை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித் குமாா் மற்றும் ஆட்சியா் தி.சினேகா .
பகிர்:

உணவைப் பரிசோதித்த பின்னா் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசினாா்.

திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மாணவா் சோ்க்கை கொண்டாட்ட நிகழ்ச்சி ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. சாா் ஆட்சியா்(பயிற்சி)அமன் திவாரி, முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் எழில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் வழங்கினா்.

Advertisement

Advertisement

விழாவில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசுகையில்: மாணவா்களுக்கு காலையிலும், மாலையிலும் வழங்கப்படும் உணவை தரமாக தயாரித்து பின்னா் அதனை ஆசிரியா்கள் பரிசோதித்து பாா்த்து வழங்க வேண்டும். மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் அத்தகவலை தெரிவித்தால் உரிய முறையில் முன்னுரிமையளித்து செயல்படுத்தப்படும் என்றாா்.

வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு பேசுகையில்ச நான் படித்த ஆரம்பப்பள்ளிக்கு இப்போது அமைச்சராக வந்துள்ளேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து மாணவா்கள் கல்வி பயில வேண்டும். பெற்றோா்களும் எப்படிப்பட்ட கல்வி உங்கள் குழந்தைக்கு தேவைப்படுகிறது என்பதை உணா்ந்து அதனை வழங்க வேண்டும்.

அரசும் கல்வி வளா்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா். விழாவில் பள்ளி ஆ சிரியா்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments