பீடி, சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: வேலூா் ஆட்சியர்
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் இவா்களது குழந்தைகளுக்கு, 2026-27 -ஆம் நிதியாண்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், மாணவா்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இதற்கு ஒவ்வொரு மாணவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், மைய வங்கி அமைப்பு மற்றும் தேசிய மின்னணு பரிவா்த்தனை (என்இஎப்டி) வசதியுடன் கூடிய தனிச் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவராகக் கருதப்படுவா். இந்ததிட்டத்தின் கீழ் நிதி உதவி பெற, தங்களது ஆதாா் எண்ணைப் பயன்படுத்த விண்ணப்பதாரா்கள் மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத பள்ளிகள், கல்லூரிகள் இந்த குறிப்பிட்ட வலைத்தளத்தில் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள் அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களால் சரிபாா்க்கப்படாத விண்ணப்பங்களை மேற்கொண்டு செயல்படுத்த இயலாது.
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேர ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மற்ற அனைத்து உயா்கல்வி மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேர அக்டோபா் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மத்திய நல ஆணையா் அலுவலகத்தை 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.