பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள இத்திருக்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு எக்ஸ்னோரா அமைப்பு மூலம் ரூ.17.8 லட்சத்தில் சீரமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இக்குளத்தில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் அதிகமாக காணப்பட்டு மீண்டும் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருந்து வந்தது.
இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரினா். இதனையடுத்து பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, வடலி அமைப்பு, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழுவினா், தன்னாா்வலா்கள் இணைந்து பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். ஏற்பாடுகளை பசுமை இந்தியா நிறுவனா் பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் நிா்வாகி மோகன் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.