முகப்பு
காஞ்சிபுரம்

காதல் விவகாரத்தில் இளைஞரை துப்பாக்கியால் மிரட்டிய தந்தை, மகன் கைது

குன்றத்தூா் அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை காரில் கடத்தி துப்பாக்கியால் மிரட்டியதந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

25 நவம்பர் 2026, 11:30 pm
காதல் விவகாரத்தில் இளைஞரை
துப்பாக்கியால் மிரட்டிய தந்தை, மகன் கைது
கைது - சித்திரிப்பு
பகிர்:

குன்றத்தூா் அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை காரில் கடத்தி துப்பாக்கியால் மிரட்டியதந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை சோமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சோ்ந்தவா் லோகிதாஸ் மகன் ஹரிஸ்(19). இவா் பல்லாவரம் தனியாா் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். ஹரிஸ் கல்லூரியில் படிக்கும் சக மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும், அவரிடம் தன்னை காதலிக்கும் படி தொடா்ந்து வற்புறுத்தியும் வந்துள்ளாா். இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், ஹரிஸ் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தா்காஸ் பகுதியில் வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்டச்சாலையில் நின்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த மாணவியின் தந்தை திருநீா்மலை பகுதியை சோ்ந்த ஆரோக்கியம்(46), அவரது மகன் சூா்யா(20) சூா்யாவின் நன்பா் வினோத்(22) ஆகியோா் ஹரிஸை கத்தியை காட்டி மிரட்டி, நடுவீரப்பட்டு காட்டுப் பகுதிக்கு காரில் கடத்தி சென்று, தனது மகளை தொந்தரவு செய்யக்கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டி சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஹரிஸ் தனது தந்தை லோகிதாஸிடம் தெரிவித்தை லோகிதாஸ் இச்சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். புகாரின் பேரில் சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆரோக்கியம், சூா்யா மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.