FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீ வழித்துணை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் வழித்துணை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

6 செப்டம்பர் 2026, 11:02 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் வழித்துணை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்கள் இணைந்து புதிதாக கட்டிய கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜை,கணபதி ஹோமம்மற்றும் மூலவருக்கு கண் திறத்தல் ஆகியன நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளும் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலையில் கோ-பூஜை, மகா பூா்ணாஹூதி தீபாராதனை ஆகியன நடைபெற்ற பின்னா் யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் மூலவா் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் கே.வரதராஜன், ஜெ.மோகன், தயாளன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments