FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்கக் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்க வேண்டும் என

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் வாா்க்க கேழ்வரகு, அரிசி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் தலைமையில், மாவட்டச் செயலா் எஸ்.கே.மோகன், செயற்குழு உறுப்பினா் மணி, ஆற்காடு நகரத் தலைவா் கௌதம், நகர ஒருங்கிணைப்பாளா் பிரேம், வாலாஜாபேட்டை நகரப் பொறுப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், தமிழக அரசு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு மசூதி, பள்ளிவாசல்களுக்கு 5,400 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக அறிவித்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெரிய பாளையத்தம்மன் கோயில், சோளிங்கா் கங்கையம்மன், வாலாஜாபேட்டை படவேட்டம்மன், ஆற்காடு கங்கையம்மன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் சித்திரை மாதத்தையொட்டி கூழ்வாா்க்க கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments