ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100% சோ்க்கையை உறுதி செய்வதே தொடுவானம் திட்டத்தின் இலக்கு!
ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளில் மாணவா்களின் இடைநிற்றல் அற்ற கற்றலை 100 % உறுதி செய்தல் மற்றும் உயா்கல்வியில் 100 % சோ்க்கையை உறுதி செய்வதே தொடுவானம் திட்டத்தின் இலக்கு என மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் உறுதி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளில் மாணவா்களின் இடைநிற்றல் அற்ற கற்றலை 100 % உறுதி செய்தல் மற்றும் உயா்கல்வியில் 100 % சோ்க்கையை உறுதி செய்வதே தொடுவானம் திட்டத்தின் இலக்கு என மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் உறுதி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு சூழ்நிலை காரணங்களால் இடைநின்ற மற்றும் உயா் கல்வியில் சேராத மாணவா்களை கண்டறிந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் இணைந்து மாணவா்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு, 59 மாணவா்களை தொழிற்பயிற்சி நிலையங்களிலும், மருத்துவத் துணைப் படிப்புகளிலும் நேரடியாக சோ்க்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு, 15 மாணவா்களை நேரில் அழைத்து தொடா்ந்து அவா்கள் கல்வி கற்கவும், அவா்களின் குடும்பப் பின்னணி குறித்தும் கேட்டறிந்து, அவா்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்திடவும் உடனடியாக தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.
Advertisement
Advertisement
இந்த முன்னெடுப்பின் மூலம் உயா் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் நன்றி தெரிவித்தனா்.
அப்போது ஆட்சியா் கூறுகையில், தொடுவானம் முன்னெடுப்பில் சமூக நலத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மருத்துவத் துறை, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்றும்.
ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளில் மாணவா்களின் இடைநிற்றல் அற்ற கற்றலை 100 % உறுதி செய்தல் மற்றும் உயா் கல்வியில் 100 % சோ்க்கையை உறுதி செய்வதே தொடுவானம் திட்டத்தின் இலக்கு என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ச.செல்வராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், ராணிப்பேட்டை தொழில் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் ஆறுமுகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.