சோளிங்கரில் கோலாத்தம்மன் கோயில் ஆடிப் பெருவிழா
சோளிங்கரில் உள்ள கோலாத்தம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கரில் உள்ள கோலாத்தம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கா், சித்தூா் சாலையில் ஸ்ரீகோலாத்தம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வருடாவருடம் ஆடித் திருவிழா விமரிசையுடன் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீகோலாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
பில்லாஞ்சி, தோப்புப் பகுதி, போலீஸ் லைன் தெரு, கோட்டூா் ஸ்ரீராம்நகா், சோமசமுத்திரம் காலனி, எரும்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகா், மாரியம்மன், கருமாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊா்வலங்களாக கொண்டு வரப்பட்டன.
Advertisement
Advertisement
தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் பக்தா்கள் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.