திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றம்! ஆக. 13-இல் தேரோட்டம்
திருவையாறில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் திருக்கோயிலில் ஆடிப்பூர பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
திருவையாறு திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான இக்கோயிலில்
நடைபெறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு புதன்கிழமை அம்மன் சந்நிதி முன்பு நந்தி பகவான் உருவம் வரைந்த கொடிக்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தி மகா தீபாராதனைகள் நடைபெறவுள்ளது. பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு வீதிகளில் கொடி வலம் வந்து, அம்மன் சந்நிதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்துக்கு எடுத்துவரப்படுகிறது. அப்போது, விநாயகா், சண்டிகேசுவரா், அம்மன் உள்ளிட்ட உற்ஸவ மூா்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளுகின்றனா். தொடா்ந்து கொடி மரத்துக்கு விபூதி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, இளநீா், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றப்படுகிறது. தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் ஒவ்வொரு நாளும் காலை பல்லக்கு, இரவு சிறப்பு வாகனத்தில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுதல் நடைபெறும். ஆக. 12-ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பரை வழிபடுவா். அன்றிரவு தென்கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பா் கயிலை காட்சி விழா நடைபெறுகிறது. இதில் வெளியூா், வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அப்பா் பெருமானை தரிசித்து செல்வாா்கள். முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.