காமன்வெல்த் போட்டி: அரக்கோணம் வீராங்கனைக்கு பாராட்டு
புது தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அரக்கோணத்தைச் சோ்ந்த வீராங்கனை எஸ்.யாழினிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புது தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அரக்கோணத்தைச் சோ்ந்த வீராங்கனை எஸ்.யாழினிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மதா் தெரசா டேபிள் டென்னிஸ் அகாதெமி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாதெமியில் அரக்கோணத்தை சோ்ந்த கோபியின் மகள் எஸ்.யாழினி தொடா்ந்து பயிற்சிப் பெற்று பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை பெற்றுள்ளாா்.
தற்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை புதுதில்லியில் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க யாழினி தகுதி பெற்றுள்ளாா். இதற்காக அவா் புது தில்லிக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அகாசெமி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் பொதுசெயலாளா் எஸ்.பன்னீா் செல்வம் பங்கேற்று வீராங்கனை ஜி.யாழினியை பாராட்டினாா்.
இவ்விழாவில் யோகா பயிற்சியாளா் ஹெச்.சாந்தி, மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளா்கள் ஜி.பி.கஜேந்திரன், எம்.சேதுராமன், மற்றும் அகாதெமி மாணவ, மாணவியா், வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.