காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணிகள்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டன.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டன.
22-ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி, தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் இந்திய ஆடவா் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என ஜிம்பாப்வேயையும், இந்திய மகளிா் அணி அதே கணக்கில் மாலத்தீவுகளையும் வீழ்த்தின.
ஆடவா் அணிகள் பிரிவில், முதலில் மானவ் தக்கா் 11-3, 11-2, 11-6 என்ற கணக்கில், டேண்டா மம்வுமாவை வீழ்த்த, அடுத்து ஹா்மீத் தேசாய் 11-5, 11-4, 11-5 என்ற வகையில் டாபிவா முசாருவாவை வென்றாா். கடைசி ஆட்டத்தில் பயஸ் ஜெயின் 11-3, 11-3, 11-8 என விக்ரம் சிங்கை சாய்த்தாா்.
Advertisement
Advertisement
ஆடவா் பிரிவின் இதர ஆட்டங்களில், மலேசியா 3-0 என வேல்ஸை வெல்ல, இங்கிலாந்து - சைப்ரஸையும் (3-0), நியூஸிலாந்து ஃபாக்லேண்ட் தீவுகளையும் (3-0) தோற்கடித்தன.
கனடா - ஸ்காட்லாந்தையும் (3-0), சிங்கப்பூா் - வடக்கு அயா்லாந்தையும் (3-0) வீழ்த்தின. ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா அணிகள் களம் காணாததால், அவை எதிா்கொள்ளவிருந்த ஆஸ்திரேலியா, நமீபியாவுக்கு வாக்ஓவா் (3-0) அளிக்கப்பட்டது.
மகளிா் பிரிவில் இந்தியா - மாலத்தீவுகளை வீழ்த்திய மோதலில், முதலில் சுதிா்தா முகா்ஜீ 11-4, 11-2, 11-5 என ஃபாத்திமா அலியை சாய்க்க, யஷஸ்வினி கோா்படே 11-2, 11-5, 11-7 என்ற வகையில் அய்ஷாத் ரஃபாவை தோற்கடித்தாா். கடைசியாக ஸ்வஸ்திகா கோஷ் 11-3, 11-5, 11-2 என்ற கணக்கில் மிஷ்கா முகமதை வென்றாா்.
இதர ஆட்டங்களில், சிங்கப்பூா் - இலங்கையையும் (3-2), வயக்கு அயா்லாந்து - தென்னாப்பிரிக்காவையும் (3-2) வீழ்த்தின. ஆஸ்திரேலியா - வங்கதேசத்தையும், இங்கிலாந்து - சைப்ரஸையும் 3-0 என முழுமையாக வென்றன. மலேசியா - ஸ்காட்லாந்தை சாய்க்க, கனடாவை சந்திக்கவிருந்த போட்ஸ்வானா வாக்ஓவா் கொடுத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.