காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாம்பியன்
தில்லியில் நடைபெற்ற 22-ஆவது காமன் வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வியாழக்கிழமை சாம்பியன் ஆகின.
தில்லியில் நடைபெற்ற 22-ஆவது காமன் வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வியாழக்கிழமை சாம்பியன் ஆகின.
ஆடவர் அணிகள் இறுதிச்சுற்றில், இந்தியா 3-2 என மலேசியாவை வீழ்த்தியது. இதில் மானவ் தக்கர் 12-10, 11-7, 5-11, 11-5 ஜாவென் சூங்கை வென்றார்.
மனுஷ் ஷா 11-13, 11-9, 11-7,2-11, 11-7 என்ற கணக்கில் கிஷென் வாங்கை வீழ்த்தினார். அவரே 11-7, 11-4, 11-4 என ஜாவென் சூங்கை சாய்த்தார்.
Advertisement
Advertisement
எனினும், ஜி.சத்தியன் 7-11,8-11, 10-12 என ஹாங்யு டெய்யிடமும், மானவ் தக்கர் 11-4,8-11, 11-8,7-11, 1-11 என கிஷென் வாங்கிடமும் தோல்வி கண்டனர்.
மகளிர் அணிகள் பிரிவில், இந் தியா 3-0 என மலேசியாவை சாய்த்தது. ஸ்வஸ்திகா கோஷ் 11-7, 11-2, 9-11, 11-9 என்ற கேம்களில், அய்ஜின் டீயை வெல்ல, ஸ்ரீசா அகுலா 9-11, 11-6, 11-4,5-11,11-3 என்ற வகையில் காரென்லைன் அனாக்கை தோற்கடித்தார்.
யஷஸ்வினி கோர்படே 7-11, 11-3, 17-15, 11-5 என ஆலிஸ் லீசியன் சாங்கை வென்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.