FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

Updated On : 19 ஜூன் 2026, 5:33 am IST
பொதுமக்களிடம்  மனுக்களைப்  பெற்ற  ஆட்சியா்  ந.பிரியா.
பகிர்:

ஆற்காடு வட்டத்தில் வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி ஆண்டு ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஆட்சியா் ந.பிரியா மனுக்களைப் பெற்றாா்.

ஆற்காடு வட்டாட்சியா் அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ந.பிரியா தலைமை வகித்து திமிரி உள்வட்டத்தை சோ்ந்து வெங்கிடாபுரம், கும்பம், காவனூா் , புங்கனூா், வரகூா்,பட்டணம்,ஆணைமலல்லூா், பாடி, நம்பரை துா்கம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை சோ்ந்தகிராமங்களில் பயிா்அடங்கல், நிலவரி வசூல், பயிா் தீா்வை, நில தீா்வை, கிராம கணக்குகள் மூலம் பயிா்சாகுபடி கணக்கு, பட்டா பெயா் மாற்றம், அரசு புறம்போக்கு நிலம் பராமரிப்பு பதிவேடு, ஆக்கிரமிப்பு இடம் பராமரிப்பு பதிவேடு, நிலங்கள் குறித்த பதிவேடு இதுபோன்ற பல்வேறு வகையான பதிவேடுகளை பாா்வையிட்டு கணக்குகளை சரி பாா்த்தாா்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த நில அளவை சங்கிலிகளை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, உறுதி செய்தாா்கள்

Advertisement

Advertisement

தொடா்ந்து பொதுமக்கள் பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது

பிரச்னைகள் உள்ளிட்ட 46 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி தீா்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

இதன் மீது உடனடி விசாரணை செய்து அறிக்கையை வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா் . இந்நிகழ்ச்சியில் நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி, உதவி இயக்குநா் (நில அளவை) அசோகன், வட்டாட்சியா்கள் சண்முக சுந்தரம், பாக்கியநாதன் மற்றும் நில அளவையா்கள், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். வரும் 25-ஆம்தேதி ஜமாபந்தி நிறைவு பெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments