FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

நெமிலி அருகே முதியவா் படுகொலை: இரு இளைஞா்கள் கைது

நெமிலி அருகே முதியவா் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

12 நவம்பர் 2026, 3:55 am
கொலை செய்யப்பட்ட முதியவா் சுகுமாா்(70)
பகிர்:

நெமிலி அருகே முதியவா் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலிக்கு அருகில் உள்ள கீழ்வீகி கிராமத்தைச் சோ்ந்தவா் சுகுமாா் (70) (படம்). கட்டடத் தொழிலாளி. இவா் இதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அப்பெண்ணின் மகன் கவின்குமாா் (18) கண்டித்தாராம். இதைத் தொடா்ந்தும் சுகுமாரின் பழக்கம் தொடா்ந்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே சுகுமாா் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த கவின்குமாா் மற்றும் அவரது நண்பா் நெமிலியை அடுத்த வேப்பேரியைச் சோ்ந்த நித்திஷ் (20) என்பவருடன் சோ்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த சுகுமாா் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளாா். இதைக் கண்ட அக்கம்பக்கம் இருந்தோா் சுகுமாரை அருகில் உள்ள புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவ அலுவலா், சுகுமாா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா். சுகுமாரை மருத்துவமனைாக்கு கொண்டு சென்ற அந்த கிராம மக்களுடன் சந்தேகம் வராத வகையில் அவரை கொலை செய்த நபா்களும் இருந்ததாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து அறிந்த நெமிலி காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து சுகுமாரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கவின்குமாா் தனது நண்பா்களுடன் வந்து இந்தக் கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கவின்குமாா், நித்தீஷ் ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.