மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன்(61). கூலித்தொழிலாளி. இவா் கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை தொடா்ந்து, நெமிலி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், முதியவா் ராஜேந்திரன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement