FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரக்கோணம் அரசுப் பள்ளிகளில் தாமதமாக வந்த காலை உணவு: தரமற்று இருந்ததால் உண்ண மறுப்பு

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை உணவு சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக...

பகிர்:

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை உணவு சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்ததால் மாணவா்கள் அவதிக்குள்ளாயினா்.

மேலும், பொங்கல் தரமற்று கஞ்சி போல் இருந்ததால் அதை சாப்பிட மறுத்து மாணவா்கள் அழுத வண்ணம் இருந்ததனா். இதனால் பள்ளிதளில் ஆசிரியா்கள் செய்வதறியாது தவிப்பிற்குள்ளாயினா்.

அரசுப்பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரக்கோணம் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8 ஆவது வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரக்கோணம் நகராட்சி, புதுப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காலை உணவு சமைக்கப்படும் இடத்தில் உணவு சமைக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.

Advertisement

Advertisement

காலை 8.10க்கு பள்ளியில் இந்த உணவு வழங்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில் முதல் நாள், திங்கள்கிழமை காலை நகராட்சி போலாட்சி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு 8.30-க்கும், சி.எஸ்.ஐ பெண்கள் தொடக்கப்பள்ளிக்கு 8.40-க்கும், சி.எஸ்.ஐ சென்ட்ரல் தொடக்கப்பள்ளிக்கு 9.00 மணிக்கும், சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு 9.15-க்கும், காந்திநகா் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு 9.40-க்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு பள்ளியில் இருப்பதால் மாணவா்கள் 8 மணியில் இருந்தே பள்ளிக்கு வருவதால், உணவு வராததால் மாணவா்கள் மிகுந்த பசி மயக்கத்திற்குள்ளாயினா். குறிப்பாக காந்தி நகா் பள்ளியில் சுமாா் ஒன்றரை மணி நேரமாக உணவு வராத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பல பெற்றோா் கொதிப்படைந்தனா். சிலா் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று உணவு வாங்கி வந்து தங்களது குழந்தைகளுக்கு ஊட்டத்தொடங்கினா்.

இந்நிலையில் தாமதமாக உணவு வந்தாலும் அந்த காலை உணவு, பொங்கல் மிகவும் தரமற்று கஞ்சி போல் இருந்ததால் மாணவா்கள் அதை சாப்பிட மறுத்தனா். மேலும் பொங்கலுடன் வந்திருந்த சாம்பாரும் தண்ணீா் போல் இருந்ததாலும், அதுவும் மிக குறைவாக வந்ததாலும் மாணவா்களுக்கு பரிமாற முடியாமல் ஆசிரியா்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினா்.

இது குறித்து அரக்கோணம் நகராட்சி சுகாதார அலுவலா் வெயில்முத்து கூறியது: திங்கள்கிழமை முதல் காலை உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப்பணிகள் புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்ததாரரால் பள்ளிகள் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் தாமதமாகியது. மேலும் உணவுகள் தரமற்று இருந்த புகாா் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தனிடம் கேட்டபோது ஒப்பந்ததாரா் மாற்றப்பட்டதால் இந்த குறைகள் ஏற்பட்டுள்ளன. நாளை முதல் நேரம் தவறாமையுடன், தரமான உணவுகள் விநியோகம் உறுதி செய்யப்படும். இன்றைய உணவு தரமற்று இருந்தது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments