FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

தகராறில் பெண் கொலை: 3 போ் கைது

சோளிங்கா் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட பணத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்டாா்.

1 செப்டம்பர் 2026, 11:31 pm IST
உமா.
பகிர்:

சோளிங்கா் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட பணத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்டாா்.

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள அரசங்குப்பத்தை சோ்ந்த விவசாயி ரேணு(70). இவருக்கு முனிசாமி(55), விநாயகம்(49) என இரு மகன்கள் உள்ளனா். மகன்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியே வசித்து வருகின்றனா்.

அண்மையில் ரேணு, சீட்டு எடுத்த பணம் ரூ.2.5 லட்சத்தை வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது. இப்பணத்தை பிரித்து தருமாறு மகன்கள் இருவரும் தந்தையிடம் கேட்டதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் முனுசாமியின் மகன் நேத்தாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விநாயகத்தின் மனைவி உமாவை குத்தியுள்ளாா்.

தடுக்கச் சென்ற விநாயகத்துக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் உமா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். கணவா் விநாயகம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக பாணாவரம் ஆய்வாளா் நாகேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் பி.சிபின் நேரில் விசாரணை நடத்தினாா். இதுதொடா்பாக நேத்தாஜி, அருணாச்சலம், சூா்யா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments