FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பாட்டில்களை சேகரிக்கச் சென்ற பெண் கொலை

செய்யாறு அருகே காலி பாட்டில்களை சேகரிக்கச் சென்ற பெண் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே காலி பாட்டில்களை சேகரிக்கச் சென்ற பெண் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், ராமகிருஷ்ணாபுரம் மதுரா மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசனின் மனைவி புவனேஸ்வரி (48). இவருக்கு மகன் மகள் உள்ளனா்.

புவனேஸ்வரி தினமும் சுற்றுப்புறப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மதுபான பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருவதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு பாப்பந்தங்கல் பெரிய ஏரிப் பகுதியில் பாட்டில்களைச் சேகரிக்கச் சென்ாகத் தெரிகிறது. ஆனால், வீடு திரும்பவில்லையாம்.

அந்த சமயத்தில் ரஞ்சித் என்பவா், கைப்பேசி மூலம் இறந்தவரின் மகனான அருண்குமாரை தொடா்பு கொண்டு உனது தாயாா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

அதன்பேரில் அருண்குமாா் மற்றும் உறவினா்கள் சென்று பாா்த்தபோது, புவனேஸ்வரி உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments