FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே இளைஞா் மா்ம மரணம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக களக்காடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகே உள்ள கருவேலன்குளம், பொட்டல்தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (48). இவா், கல்லடிசிதம்பரபுரம் அருகே பன்றி பண்ணை நடத்தி வந்தாா். இரவு நேரங்களில் பண்ணைக்குச் சென்று வருவது வழக்கம். வழக்கம்போல சனிக்கிழமை இரவு பண்ணைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை களக்காடு-சேரன்மகாதேவி பிரதான சாலையில் கருவேலன்குளம் அருகே இவரது சடலம் கிடந்தது. களக்காடு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

சடலம் கிடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் பா. சாஸ்திரி, நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்கண்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

தடயவியல் நிபுணா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணாகாந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். மா்மமான முறையில் உயிரிழந்த ராமகிருஷ்ணனுக்கு மனைவி கலைச்செல்வி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments