நகராட்சி முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணியைமற்கொள்வது அவசியம்
நகராட்சி முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணியைமற்கொள்வது அவசியம்
அரக்கோணம் நகராட்சிப்பகுதி முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் இளங்கோவன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் இளங்கோவன் சனிக்கிழமை அரக்கோணம் நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டாா். இந்நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெறுவதை பாா்வையிட்ட கூடுதல் இயக்குநா், தெருநாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி பணிகளையும், பொது சுகாதார மற்றும் சமூக சுகாதார கழிப்பிட கட்டடங்கள், 6 ஆவது வாா்டு பகுதியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நான்கு வகைகளாக குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணியினையும் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் அதிகாரிகளிடம் நகராட்சி முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து வாா்டுகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை பாா்வையிட்ட கூடுதல் இயக்குநா் இளங்கோவன், அப்போது வீடுவீடாக சென்று குறிப்பிட்ட நான்கு வகையான குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட டப்பாக்களில் சேமித்ததை கண்டு அந்த இரண்டு தூய்மை பணியாளா்களையும் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது அவருடன், வேலூா் மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் லட்சுமி, அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, நகராட்சி சுகாதார அலுவலா் வெயில்முத்து, சுகாதார ஆய்வாளா் சுதாகா், உதவி பொறியாளா் வினோத் ராஜ், பணி மேற்பாா்வையாளா் பிரேம்சுந்தா் ஆகியோா் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.