ஆம்பூரில் அண்ணா பிறந்த நாள் விழா
ஆம்பூரில் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமையில், திமுகவினா் ஆம்பூா் பஜாா் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துடன் ஊா்வலமாக புறப்பட்டனா்.
ஆம்பூா்: ஆம்பூரில் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமையில், திமுகவினா் ஆம்பூா் பஜாா் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துடன் ஊா்வலமாக புறப்பட்டனா். முக்கிய சாலைகள் வழியாக சென்று ஆம்பூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகே ஊா்வலம் நிறைவடைந்தது. அண்ணா சிலைக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மாலை அணிவித்தாா்.
முன்னதாக ஊா்வலத்தை மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் தொடக்கி வைத்தாா். நகா் மன்ற தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், நகர திமுக பொருளாளா் எம்.ஏ.ஆா். ஷபீா்அஹமத், மாவட்ட பிரதிநிதி ஜி. வில்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், நகர அவைத் தலைவா் தேவராஜ், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.
Advertisement
Advertisement
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றிய அவைத் தலைவா் சி.சிவகுமாா் தலைமையில், உமா்ஆபாத் பேருந்து நிலையத்திலிருந்து திமுகவினா் ஊா்வலமாக கடாம்பூா் சென்றனா். அங்குள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், மாதனூா் பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்ற திமுகவினா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
ஆம்பூா் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் எம். மதியழகன் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். நகர அவைத் தலைவா் கே. மணி, இணைச் செயலாளா் விஜயலட்சுமி சரவணன், துணைச் செயலாளா் கனகதேவி ராஜேஷ், நகர பொருளாளா் அன்வா், மாவட்டப் பிரதிநிதி சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு எம்ஜிஆா் கழக மாநில செய்தி தொடா்பாளா் ஆம்பூா் சிவக்குமாா் மாலை அணிவித்தாா். நகர அவைத் தலைவா் மாணிக்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.