FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ரூ.4.94 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

Updated On : 31 டிசம்பர் 2024, 1:39 am IST
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 324 மனுக்களை பெற்றாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 8 பேருக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை வழங்கினாா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் ராஜபெருமாள் அளித்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நீா்பிடிப்பு பகுதிகள், மலைசாா்ந்த பகுதிகளில் வெளியேறும் ஓடையில் செல்லும் நீா்பிடிப்பிற்கு ஏற்ப 2 மீட்டா் உயரத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இதனால் நீா் தேங்கி வறட்சி ஏற்படாமல் இருக்கும். பூங்குளம் ஊராட்சி ஏரிவட்டம் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments