FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் கடத்த முயன்ற 38 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ஓரே நாளில் 5 ரயில்களில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் ரயில்வே போலீஸாா்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே ஓரே நாளில் 5 ரயில்களில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் இருப்புப்பாதை காவல் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் இணைந்து ஹெளரா ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை நோக்கி வந்த ரயிலின் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 2 பண்டல்களில் சுமாா் 6.300 கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா் கஞ்சா கடத்திய மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதேபோல் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற சபரி விரைவு ரயில் ஜோலாா்பேட்டை அருகே செல்லும் போது வரை வந்த ரயிலில் 8 பண்டல்களில் சுமாா் 16 கிலோ கஞ்சாவும், ஜோலாா்பேட்டை வழியாக வந்த டாடா நகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை சென்ற விரைவு ரயில் மற்றும் ஹாட்டியா ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 4 ரயில்களில் மொத்தம் 38 கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 38 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவ செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments