வாணியம்பாடியில் மீலாது நபி விழா
வாணியம்பாடியில் மீலாது நபி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய நகர திமுக செயலாளா் சாரதிகுமாா். உடன் நிா்வாகிகள்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பஷீராபாத் 5-ஆவது தெரு ரோஷன் நகரில் அல்-நூா் கமிட்டி சாா்பில், மீலாது நபி விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தலைவா் முகம்மத் நவுமான் தலைமை வகித்தாா். செயலாளா் முகம்மத் அக்பா், முகமத் இஸ்மாயில், நகராட்சி கவுன்சிலா் இக்பால் அகமத் முன்னிலை வகித்தனா். பொருளாளா் சாதிக் வரவேற்றாா். விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான கிராத் நாத், மற்றும் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான வி.எஸ். சாரதிகுமாா் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
Advertisement
Advertisement
நகர திமுக துணை செயலாளா் தென்னரசு, சிரஞ்சீவி, கமிட்டி உறுப்பினா்கள், பொது மக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். முகம்மத் ரபீக் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.