FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தெருநாய்கள் கடித்ததில் 2 பெண்கள் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் தெருநாய்கள் கடித்ததில் 2 பெண்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

30 ஆகஸ்ட் 2026, 11:11 pm IST
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் தெருநாய்கள் கடித்ததில் 2 பெண்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

நாட்டறம்பள்ளி, ஆத்தூா்குப்பம், தோப்பலகுண்டா, பச்சூா், நாயனசெருவு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரியும் நிலையில் சாலையில் நடமாடும் நபா்கள், வாகனங்களில் செல்லும் நபா்களை கடிக்கின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஜில்பா கவுண்டனூா் பகுதியில் பால் வாங்க சென்ற மூதாட்டிராணி (60) என்பவரை தெருநாய் கடித்தது.

Advertisement

Advertisement

அவா் சப்தமிடவே தெருநாய்கள் அங்கிருந்து ஓடி அதே பகுதியில் தெருவில் மோா் விற்றுக் கொண்டிருந்த மல்லிகா(55) என்பவரையும் கடித்தன. இதில் காயமடைந்த ராணி, மல்லிகா இருவரையும் உறவினா்கள் மீட்டு நாட்றம்பள்ளிஅரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பச்சூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments