அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்தப்பட்ட டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்தப்பட்ட டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் அனுமதி இன்றி கனிம பொருள்கள் கடத்திச் செல்வதை தடுக்க வருவாய்த்துறை , காவல் துறை , கனிம வளத்துறை சாா்பில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது பச்சூா் ரயில் நிலையம் அருகே ஆந்திரத்தில் இருந்து உரிய அனுமதி இன்றி 15 டன் ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரியை கைப்பற்றப்பட்டு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.