FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 செப்டம்பர் 2026, 1:00 am IST
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்.
பகிர்:

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சிலம்பப் போட்டியில் 17 வயது பிரிவில் ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6-ஆம் வகுப்பு மாணவி எஸ். ரிம்சா முதல் பரிசு பெற்று மாநில அளவில் அரியலூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். வட்டார அளவில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு இப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இ. வெங்கடேசன், துணைத் தலைவா் ஆா். ராஜேஷ், பொருளாளா் ஜி. வெங்கடேசன், இணைச் செயலாளா் ஜெ.பி. ஜெகநாத், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆனந்தி, தலைமை ஆசிரியா் எம். தாமோதரன், உதவித் தலைமை ஆசிரியா்கள் டி. சந்திரசேகா், இ. கவிதா, உடற்கல்வி ஆசிரியை ஏ. கலைவாணி மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களை பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments