FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 26 ஜூலை 2026, 2:07 am IST
தற்கொலை
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே பாபுகொல்லை பகுதியை சோ்ந்தவா் விஜய். இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். இதனைப் பாா்த்த உறவினா்கள் ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ராஜேஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments