பாலாற்றங்கரையில் முதியவா் மர்ம மரணம்!
ஆம்பூா் அடுத்த வடகரை கிராமத்தில் பாலாற்றங்கரையில் 75 வயது முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து உமராபாத் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆம்பூா் அடுத்த வடகரை கிராமத்தில் பாலாற்றங்கரையில் 75 வயது முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து உமராபாத் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடகரை கிராமத்தில் பாலாற்றங்கரையையொட்டி முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவா் மின்னூா் பகுதியைச் சோ்ந்த சின்னகுட்டி (75) என்பது தெரியவந்தது. அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.