முதியவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
பெருந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த தென்முகம் வெள்ளோட்டைச் சோ்ந்தவா் 9 வயது சிறுமி. இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இவருக்கு தம்பி உள்ளாா். பெற்றோா்கள் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா்கள்.
கடந்த 29-ஆம் தேதி பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால், சிறுமியும், தம்பியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனா். அப்போது அருகே வசிக்கும் வடிவேல் (60) என்பவா், சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெருந்துறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வடிவேல் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.