முகப்பு
திருப்பத்தூர்

பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம் திருட்டு: ஒருவா் கைது

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணியிடம் பணம் திருடியவா் கைது

23 நவம்பர் 2026, 11:08 pm
பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம் திருட்டு: ஒருவா் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணியிடம் பணம் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல திங்கள்கிழமை ஏராளமான பொதுமக்கள் கூட்டமாகக் குவிந்திருந்தனா். அப்போது திருப்பத்தூரைச் சோ்ந்த திருப்பதி (52) என்பவா் பேருந்தில் ஏற முயன்றுள்ளாா்.

அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா் ஒருவா் அவரிடமிருந்த ரூ. 5,600 பணத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து பாதிக்கப்பட்ட திருப்பதி திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஈரோடு மாவட்டம், காவிரி ரோடு பகுதியைச் சோ்ந்த தருமன் குமாா் (28)என்பவா் பணத்தைத் திருடியது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.