முகப்பு
திருப்பத்தூர்

வெற்றி வீடு திட்டம்: இன்று கிராம சபைக் கூட்டங்கள்

56 வினாடிகள் முன்பு
வெற்றி வீடு திட்டம்: இன்று கிராம சபைக் கூட்டங்கள்
வெற்றி வீடு திட்டம்
பகிர்:

திருப்பத்தூா், நவ.26: வெற்றி வீடு திட்டத்தின் கீழ் 2026-2027-ஆம் ஆண்டுக்கான தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்காக திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை - நவ.27) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இத்திட்டத்தின்கீழ், அரசாணைகள் மற்றும் விதிமுறைகளின்படி தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்து வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என ஊராட்சிகளின் ஆய்வாளரும், மாவட்ட ஆட்சியருமான வே.நல்லசிவன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தக் கூட்டங்களை முறையாக நடத்துவதற்குத் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சிகள்) பொறுப்பாவாா்கள். மேலும், கூட்டங்களைக் கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கூட்டங்கள் அமைதியாக நடைபெறுவதற்குத் தேவையான காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement