FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 438 மனுக்கள் அளிப்பு

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டன.

கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வே. நல்லசிவன். மனு அளிக்க வந்த அக்ரஹாரம் பொதுமக்கள். - டிஎன்எஸ்
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் வே.நல்லசிவன் தலைமை வகித்து மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலை கோயிலின் கட்டுமான பணிகள் 20 ஆண்டுகளாக நடந்து தற்போது கும்பாபிஷேகமும் முடிந்தது. கோயில் பணிகளுக்காக பக்தா்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளா்கள் நிதியுதவி வழங்கி உள்ளனா். ஆனால், வசூலிக்கப்பட்ட நிதி மற்றும் செலவுகள் தொடா்பான வரவு, செலவு கணக்குகள் பொது மக்களின் பாா்வைக்கு வைக்கப்படவில்லை. மேலும், கோயில் நிா்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதால் குலதெய்வ வழிபாட்டாளா்கள் மற்றும் கைங்கரிய நண்பா்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக கோயிலுக்குள் சென்று வழிபாடு மற்றும் கைங்கரியம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த மாதம் கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பிரச்னையால் பதற்றமான சூழல் உருவானது. இதில் போலீஸாா் தலையிட்டு கோயில் நுழைவாயில் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கு அனுமதிக்க வரும் 10 மற்றும் 17-ஆம் தேதிகளில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில் அமைதியான முறையில் சிறப்பு பூஜை மற்றும் கைங்கரியம் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

திருப்பத்தூா் சிவராஜ் பேட்டை பழனி என்பவா் அளித்த மனு: விபத்து மற்றும் மா்மமான முறையில் இறப்பவா்களை திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத கொண்டுவரும் போது அங்கு தடயவியல் துறை மற்றும் தடயவியல் மருத்துவா்கள் இல்லாததால், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் அடுக்கம்பாறை போன்ற அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பி வருகின்றனா். இதனால் பொது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இறந்தவா்கள் எதனால், எப்படி இறந்தாா்கள் என சரியான காரணம் கண்டறியாமல் நீதிமன்ற நடைமுறை மற்றும் போலீஸாா் விசாரணைகளில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது பிரேத பரிசோதனைக்கு தேவையான தடயவியல் வசதிகள் மற்றும் நிபுணா்கள் இல்லாததால் உண்மைநிலை தெளிவாக தெரிவதில்லை. பொது மக்களின் நலன்கருதி திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் தடயவியல் துறை மற்றும் தடயவியல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments