FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலமாக்கள் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் பெற

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் பெற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற உலமா அடையாள அட்டை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 
உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.  
இந்த வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வருவாய்த் துறை சான்று, மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு எண், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments