FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

15-இல் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி சனிக்கிழமை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான போட்டி மேற்குறிப்பிட்ட நாளில் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தொடங்க உள்ளது. இதில் ஆண்கள் 13-வயதுக்குள் 15 கி.மீ, 15 வயதுக்குள் 20 கி.மீ., 17 வயதுக்குள் 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 கி.மீ, 15 கி.மீ. தூரம் என 3 பிரிவுகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி வரையில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசும், முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றன. 
 இந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் முன் குறிப்பிட்ட நாளில் நேரில் ஆஜராகி பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments