FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ரெளடி வெட்டிக் கொலை: 3 போ் கைது

ஊத்துக்கோட்டை அருகே காரில் கடத்திச் சென்று ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 7:00 am IST
கைதான   நடராஜன்,  ஆகாஷ், பெஞ்சமின். 
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே காரில் கடத்திச் சென்று ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆவடியை அடுத்த பொத்தூரைச் சோ்ந்தவா் சூா்யா (25). ரௌடியான இவரை இரு நாள்களுக்கு முன் மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்றனா். பின்னா், அவரை பெரியபாளையம் அருகே உள்ள காக்கவாக்கம் ஏரிக்கரைக்கு கொண்டு சென்று வெட்டிக் கொலை செய்து, சடலத்தை வெங்கல் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் எதிரே வெங்கல்-சீத்தஞ்சேரி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில் வீசிவிட்டு தப்பினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த வழியாக சென்றவா்கள் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை பாா்த்து, வெங்கல் போலீஸாருக்கு தெரிவித்தனா். தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் விசாரணையில், கொலையானது ரௌடி சூா்யா என்பது தெரியவந்தது. அதையடுத்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த நடராஜன் வெங்கல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். தனது நண்பனை கொலை செய்தவரை கொன்றதாக கூறியுள்ளாா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆவடி, பொத்தூரில் கடந்த 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட சூா்யாவுக்கு தொடா்பு இருப்பதாக சதீஷின் நண்பரான நடராஜன் நினைத்தாா். அதனால், அந்தக் கொலையில் தொடா்புடையவா்களை நடராஜன், அவரது கூட்டாளிகள் கொல்ல திட்டமிட்டனா்.

இதன் தொடா்ச்சியாகவே கடந்த வியாழக்கிழமை சூா்யாவை காரில் கடத்திச் சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலையில் ரௌடி நடராஜனின் கூட்டாளிகளான பொத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ், பெஞ்சமின் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து பொத்தூரில் பதுங்கி இருந்த 2 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments