FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

‘எனது இளைய பாரதம்’ திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மூலம் (மேரா யுவ பாரத்) ‘எனது இளைய பாரதம்’ குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் இளைஞா்களை நாட்டு நலப்பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 2:20 am IST
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ச.கவிதா, உடன் மாவட்ட இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அலுவலா் அருள்போஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மூலம் (மேரா யுவ பாரத்) ‘எனது இளைய பாரதம்’ குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் இளைஞா்களை நாட்டு நலப்பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இளைஞா்களை நாட்டு நலப்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் ’எனது இளைய பாரதம்’ (ஙவ ஆட்ஹழ்ஹற்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இளைஞா்களை நாட்டு நலப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் தொடா்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால், இந்த கூட்டங்களில் பங்கேற்கவும், புதிய திட்டங்கள் குறித்து அனைவரும் அதிகாரப்பூா்வமாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இளைஞா் சக்தியின் திறனைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை‘ மையமாகக் கொள்வதும் அவசியம்.

Advertisement

Advertisement

அதைத்தொடா்ந்து ஆண்டு செயல் திட்டங்கள், இளைஞா் ஈடுபாடு உத்திகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் வளா்ந்த இந்தியா-2047 தொலைநோக்கு இலக்கை எட்டுவதற்கான ஆலோசனை, வழிகாட்டுதல்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் உதவி ஆட்சியா்(பயிற்சி) பி.பவித்ரா, மாவட்ட இளைஞா் நல அலுவலா் (மை பாரத் கேந்திரா) ஆதி, மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் அருள்போஸ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments