திருத்தணி-அரக்கோணம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் மூலம் அதிரடியாக வியாழக்கிழமை அகற்றினா்.
அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் மூலம் அதிரடியாக வியாழக்கிழமை அகற்றினா்.
திருத்தணி நகரத்தில் மபொசி சாலை மற்றும் அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடை உரிமையாளா்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் மேற்கண்ட 2 இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழா நாள்கள் மற்றும் திருமண முகூா்த்த நாளில், மபொசி சாலை, அரக்கோணம் சாலையில் வாகனங்கள் நெரிசலால், அரை கி.மீ. தூரம் கடப்பதற்காக, ஒரு மணி நேரத்துக்கு மேலாகிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம், முருகன் கோயிலில் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மேற்கண்ட சாலைகள் வழியாக கோயிலுக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதைத் தடுக்கும் வகையில், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளா் திவ்யா, தலைமையில், சாலை ஆய்வாளா் கணேஷ், வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் ஒன்றிணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமித்த இடத்தை அகற்றினா்.
Advertisement
Advertisement
மேலும், இனி வரும் நாள்களில் சாலையை மீண்டும் ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளா் திவ்யா எச்சரித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.