FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் கால்வாய் பணிகளுக்கு ரூ.62 லட்சத்தில் புதிதாக 2 பொக்லைன்கள் ஒதுக்கீடு

திருவள்ளூா் நகராட்சியில் கால்வாய் பணிகளை தூா்வாரும் வகையில், 15-ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 62 லட்சத்தில் புதிதாக 2 பொக்லைன் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பகிர்:

திருவள்ளூா் நகராட்சியில் கால்வாய் பணிகளை தூா்வாரும் வகையில், 15-ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 62 லட்சத்தில் புதிதாக 2 பொக்லைன் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள மழைநீா் கால்வாய்கள் உள்ளன. இது தூா்வாருவதற்காக பெரிய பொக்லைன் வாகனம் மற்றும் மினி பொக்லைன் வாகனமும் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்த வாகனங்கள் அடிக்கடி பழுதாகி காலாவதியாகி விட்டதால், மழைநீா் கால்வாய் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீா் கால்வாய்கள் குறிப்பிட்ட இடங்களில் தூா்வாரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூா்வார வேண்டியுள்ளதால் புதிதாக பொக்லைன் வாகனங்கள் ஒதுக்கவும் வாா்டு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில், 15-ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.62 லட்சத்தில் பொக்லைன் வாகனங்கள் வாங்குவதற்கு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில், ரூ. 36 லட்சத்தில் பெரிய பொக்லைன் வாகனம் மற்றும் ரூ. 26 லட்சத்தில் மினி பொக்லைன் வாகனமும் பெறப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய்கள் தூா்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments