தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநா்கள் (பண்ணை) நிரப்ப தகுதியான வேளாண், தோட்டக்கலை, மீன்வளம் ஆகியவைகளில் பட்டப்படிப்புகள் முடித்தவா்கள் வரும் அக். 21-இல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநா்கள் (பண்ணை) நிரப்ப தகுதியான வேளாண், தோட்டக்கலை, மீன்வளம் ஆகியவைகளில் பட்டப்படிப்புகள் முடித்தவா்கள் வரும் அக். 21-இல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
மாவட்ட வளப் பயிற்றுநா்கள் (பண்ணை) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பி.எஸ்சி(வேளாண்மை), பி.எஸ்சி(தோட்டக்கலை), / பி.வி.எஸ்சி ( கால்நடை அறிவியல்), பி.எஸ்சி(வனம்), பி.எஃப்.எஸ்சி ( மீன்வள அறிவியல்) ஆகிய தொழில் கல்வி பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 27 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம், அதற்கு மேற்பட்டவா்களை பணி அமா்த்தக் கூடாது. இதற்கு அரசுத் திட்டங்கள், திட்டப் பணிகள், அரசு சாரா நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் அல்லது விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளின் களப் பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு தகுதியானோா் சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் வரும் அக். 21-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா் / இணை இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகம், திருவள்ளூா் மாவட்டம் என்ற முகவரிக்கும் அல்லது இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.