FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 501 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 501 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ச.கவிதா பெற்றுக் கொண்டாா்.

13 அக்டோபர் 2026, 12:11 am IST
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா.
பகிர்:

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 501 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ச.கவிதா பெற்றுக் கொண்டாா்.

ஆட்சியா் அலுவலக வளாக பல்நோக்கு கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப்பிரச்னைகளை தீா்க்கவும் கோரி அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா். மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்த துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) சாந்தமூா்த்தி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் குமாா் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments