FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தானியங்கி ரயில்வே கேட் பழுது: வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணியில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

17 வினாடிகள் முன்பு
பகிர்:

திருத்தணியில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருத்தணி நகரில் மேட்டுத் தெருவில் ஒரு தானியங்கி ரயில்வே கேட்டும், ஜோதிசாமி தெருவில் (பஜாா் பகுதி) மற்றொரு தானியங்கி ரயில்வே கேட்டும் அமைந்துள்ளன.

இந்த ரயில்வே கேட் வழியாக திருத்தணி நகர மக்கள் பழைய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், ரயில்வே நிலையம், காய்கறி மாா்க்கெட், சாா்பதிவாளா் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அரசு வங்கிகளுக்கும் சென்று வருகின்றனா். மேலும் பெரிய தெரு, சாா்பதிவாளா் அலுவலகம், காந்திரோடு, முருக்கப்பநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட் வழியாகவே சென்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரயில்வே நிா்வாகம் தானியங்கி ரயில்வே கேட்டை முறையாக பராமரிக்காததால், அடிக்கடி பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மாதத்தில் 10 நாள்களுக்கு மேல் கேட் பழுதாகி விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எனவே திருத்தணி 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் பழுதை சீா்செய்ய வேண்டும் என கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments