திருத்தணியில் புரட்டாசி கிருத்திகை: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், பொது தரிசனத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், பொது தரிசனத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தோ் வீதிகளில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
கிருத்திகை விழாவுடன் பள்ளிகளுக்கு காலாண்டு தோ்வு விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், வழக்கத்தை விட அதிகளவில் பக்தா்கள் குவிந்தனா். இதனால் பொது தரிசனத்திற்காக வந்த பக்தா்கள் சுமாா் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களும் சுமாா் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் திமான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், மலைக்கோயிலுக்கு ஆட்டோ, பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.